டெல்லியில் காரில் இருந்து 99 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல், 2 பேர் கைது
டெல்லி: டெல்லியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ஒரு காரில் இருந்து 99 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி சோனியா விஹார் பகுதியில் சிறப்பு படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரின் ஹெட்லைட்டுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 99 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காரில் இருந்த பீகார் மாநிலம் முங்கர் மாநிலத்தைச் சேர்ந்த மிஷ்ரா மற்றும் பிரோஸ் ஆலம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் முங்கரில் தயாரிக்கப்பட்டவை. முங்கரில் சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 130 முங்கர் துப்பாக்கிகள் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விற்கப்படும் இந்த துப்பாக்கிகளுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி மற்றும் வங்கதேசத்தில் நல்ல கிராக்கி உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications