விரைவில், இங்கிலாந்து சாலையில் வலம் வரப்போகும் டிரைவரில்லாத கார்கள்
லண்டன்: இங்கிலாந்தில் தானியங்கி கார்கள் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால், விரைவில் அவற்றை கிராமப் புற சாலைகளில் பயன் படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தைத் தடுக்கும் வகையிலும் பாட்டரி வாகனங்கள் மற்றும் தானியங்கி வாகனங்களைப் பயன் படுத்த முடிவு செய்துள்ளது இங்கிலாந்து அரசு.
இத்தகைய கார்களை அதிகப்படுத்துவதன் மூலம், விபத்துகள் தவிர்க்கப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தானியங்கி கார்...
இங்கிலாந்தின் முயற்சிக்கு தக்கபடி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஜப்பானின் சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனமான நிசானுடன் இணைந்து இந்த தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.

சோதனை ஓட்டம்...
சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள அறிவியல் பூங்கா சாலையில் இதன் சோதனை ஓட்டம் நடை பெற்றது. சோதனை ஓட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த தானியக்கி கார்களை போக்குவரத்து நிறைந்த தெருக்களில் ஓட்டிப்பார்ப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது.

கிராமப்புறச் சாலைகளில்...
முதற்கட்டமாக கிராமப்புறம் மற்றும் புறநகர் சாலைகளில் இந்த கார்கள் ஓட்டப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

பாதுகாப்பிற்கு ஒரு டிரைவர்....
ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பாதையை இத்தானியங்கி கார்களில் பதிவு செய்து விட்டால் போதுமானது. அவை தொடர்ந்து அதே பாதையில் இயங்கும். ஆனால், தற்போதைக்கு சோதனை ஓட்டத்தின் போது பாதுகாப்பிற்கு ஒரு டிரைவரும் உடன் செல்வார் எனத் தெரிகிறது.

கூகுள் கார்கள்...
இதற்கு முன்னர் இணையதள நிறுவனமான கூகுள், சான்பிரான்சிஸ்கோ சாலைகளில் இதுபோன்ற ஆளில்லா கார்களை 1,60,934கி.மீ ஓட்டி சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. காமிராக்கள், ராடார்கள் மற்றும் லேசர் சென்சார்கள் உதவியுடன் அக்கார்கள் இயக்கப்பட்டன.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications