மைனர் சிறுவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் பார்க்க உரிமை இல்லை: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஃபேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பார்க்க அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு உரிமையும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
சமூக வலை தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்கவும், இவைகளில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்க சமூக வலை தள நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உரிமை இல்லை
13 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பார்வையிட அனுமதி இல்லை என்ற வாசகத்தை ஃபேஸ்புக், ஆர்க்குட், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரியளவில் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

பகிரப்படும் தகவல்கள்
சமூகவலைத்தளங்கள் மூலம் தகவல்கள், படங்கள் பகிரப்படுகின்றன. ஆபாசப் படங்கள், தகவல்களை 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பார்க்க நேரிடுவதும், பகிர்வதும் ஆபத்தானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கணக்கு தொடங்க முடியாது
ஜி.மெயில் உபயோகித்து சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கினால் வயது தொடர்பான கேள்வி எழுப்பப்படுகிறது. அதில் 13 வயதிற்கு குறைவானதாக குறிப்பிடப்படுபவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க அனுமதி கிடையாது என்று கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications