சுயேட்சை வேட்பாளர்கள் வீடுகளை எரியுங்கள், போலீசார் மீது குண்டு வீசுங்கள்: மமதா கட்சி நிர்வாகி பேச்சு
கொல்கத்தா: பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைகளின் வீடுகளை எரிக்கவும், போலீசார் மீது குண்டுகளை வீசவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுபிரதா மோண்டல் தொண்டர்களை தூண்டிவிட்டுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பாம் மாவட்ட தலைவர் அனுபிரதா மோண்டல்.
அவர் போல்பூர் துணை பிரிவில் உள்ள கஸ்பா கிராமத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில்,
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் உங்களை மிரட்டினால் அவரது வீட்டை எரித்துவிடுங்கள். அவருக்கு வாக்களிக்காதீர்கள். அவர்களுக்கு நிர்வாகம் ஆதரவு தெரிவித்தால் போலீசார் மீது குண்டுகளை வீசுங்கள் என்றார்.
அவர் அப்படி பேசியபோது விவசாயத் துறை அமைச்சர் மலாய் கடக் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரின் வீடு இன்று எரிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டை எரிக்கும் முன்பு வீட்டில் இருந்த நகை, பணத்தை அந்த கும்பல் சூறையாடியது என்று சுயேட்சை வேட்பாளரின் மனைவி தெரிவித்துள்ளார். அனுபிரதாவின் பேச்சைக் கேட்டு தான் தன் வீடு எரிக்கப்பட்டுள்ளது என்று அந்த வேட்பாளர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications