ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் புது ‘எடைக்குறைப்புத்’ திட்டம்
துபாய்: உடல் எடையில் ஒரு கிலோவைக் குறைத்தால், ஒரு கிராம் தங்கம் பரிசளிக்க இருப்பதாக கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது துபாய் அரசு.
இன்று மனிதனுக்கு பெரும் எதிரியாக இருப்பது உடல் பருமன் தான். அதன் காரணமாகவே பலருக்கு இளமையிலேயே பல நோய்கள் உண்டாகி மரணம் கூட நேரிடுகிறது.
துபாயில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் துபாய் அரசு உடல் எடையைக் குறைத்தால் தங்கம் என அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

புதிய சுகாதார திட்டம்...
துபாயில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டம் தான், இந்த ஒரு கிலோ எடையைக் குறைத்தால் ஒரு கிராம் தங்கக் காசு திட்டம். இது, உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டமாம்.
முன்பதிவு அவசியம்...
இந்தத் திட்டத்தில் வெற்றி பெற விரும்புபவர்கள் முதலில் தற்போதைய தங்களது எடையை வரும் வெள்ளிக்குள் பரிசோதித்து பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்.
ஒரு மாதகால அவகாசம்...
அடுத்து வரும், ஒருமாத காலத்திற்குள் குறைந்தப்பட்சமாக 2 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட உடல் எடையை குறைத்துக் காட்டுபவர்களுக்கு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தங்கம் பரிசாக வழங்கப்படும் எனவும், இதில் பங்கு பெற உச்சவரம்பு ஏதுமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.
உடற்பயிற்சியில் ஆர்வம்...
இதன் மூலம், மக்கள் துரித உணவகங்களில் அதிகம் சாப்பிடுவதை கைவிட்டு, உடற் பயிற்சியின் மீது ஆர்வம் காட்டுவர் என துபாய் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications