திவாலானது உலகின் 'மோட்டார் சிட்டி' டெட்ராய்ட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: எழுபதுகளில் சியாட்டில் நகரம் திவாலை அறிவித்த நேரம்.. அதன் விமான நிலையத்துக்கு வெளியே ஒரு பெரிய விளம்பரப் பலகையில், 'இந்த நகரிலிருந்து வெளியேறும் கடைசி நபர் நகரின் விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்லுங்கள்," என எழுதப்பட்டிருந்தது.

அத்தனை மோசமான நிதி நெருக்கடியைச் சந்தித்த அந்த நகரின் விளக்குகள் அணைக்கப்படவில்லை. மைக்ரோசாப்டும் அமேசானும் ஸ்டார்பக்ஸும் இன்ன பிற நிறுவனங்களும், வீழ்ந்த அந்த நகரை தூக்கி நிறுத்திவிட்டன. இன்று அமெரிக்காவில், அதிக தனிநபர் வருவாய் ஈட்டும் வளமான நகரங்களில் ஒன்று சியாட்டில்.

டெட் சிட்டி டெட்ராய்ட்

டெட் சிட்டி டெட்ராய்ட்

அன்று சியாட்டிலுக்கு வந்ததை விட மிகப்பெரிய நிதி நெருக்கடி - கடன் சுமையில் தவிக்கும் டெட்ராய் நகரம், தான் திவாலாகிவிட்டதாக அறிவித்து பிரிவு 9-ன் கீழ் உதவி கோரியுள்ளது.

மோட்டார் நகரம்

மோட்டார் நகரம்

அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத மிகப் பெரிய திவால், டெட்ராய்ட்டுக்கு வந்திருப்பதுதான். அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று டெட்ராய்ட். உலகின் மோட்டார் நகரம் என்று புகழும் வகையில், கணக்கற்ற கார் தொழிற்சாலைகள் இந்த நகரெங்கும்.

ஜிஎம், ஃபோர்ட், க்ரிஸ்லர் ஆகிய மூன்று பிரமாண்ட கார் தயாரிப்பு நிறுவனங்களும் இங்குதான் தங்கள் தலைமையகங்களை வைத்துள்ளன. உலகின் மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூட டெட்ராய்டில் தங்கள் கிளை இருப்பதை பெருமையாக நினைத்த காலம் ஒன்று உண்டு.

சென்னைதான் நம்பர் ஒன்...

சென்னைதான் நம்பர் ஒன்...

ஆனால் அதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு டெட்ராய்டை விட அதிக அளவில் கார் உற்பத்தியாகும் இடம் எது தெரியுமா... நம்புங்க, நம்ம சென்னையில்தான்! (ஆனால் டெட்ராய்ட் நிலை சென்னைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை- அது தனி கதை!)

கடந்த பத்தாண்டுகளில் டெட்ராய் சந்தித்துள்ள வீழ்ச்சி அசாதாரணமானது. மலை உச்சியிலிருந்து பெரும் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது போன்ற வீழ்ச்சி.

வீழ்ச்சிகள்

வீழ்ச்சிகள்

இன்று டெட்ராய்ட்டின் மக்கள் தொகை 7 லட்சம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன் இது 9 லட்சமாக இருந்தது. 2000-ல் அமெரிக்காவின் 8வது பெரிய நகரம் என்ற அந்தஸ்திலிருந்து இன்று 18வது நகரமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

தனி நபர் வருவாய் மிக மோசம். ஆண்டு வருவாய் சராசரியாக ரூ 9 லட்சம்தான். ஆனால் முன்பு திவாலாகி இப்போது ஐடி சிட்டியாகத் திகழும் சியாட்டிலில் இது ரூ 25 லட்சமாக உள்ளது.

இந்த நகரின் மொத்த கடன் மட்டும் 18.5 பில்லியன் டாலர்கள். இதிலிருந்து மீள வழி இல்லாததால்தான் பிரிவு 9-ன் கீழ் திவால் அறிவிப்பு.

ஆபத்தான நகரம்

ஆபத்தான நகரம்

அமெரிக்காவின் மிக ஆபத்தான நகரமாக இன்று டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் முழுவதும் 78000 கட்டடங்கள், உள்கட்டமைப்புகள் ஆபத்தான நிலையில் உள்ளன என்றால், நகரிலிருக்கும் ஆபத்து புரியலாம்!

இன்றைக்கு டெட்ராய்டில் ஒரே ஒரு கார் தயாரிப்பு தொழிற்சாலை மட்டுமே உற்பத்தியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மற்றவை அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.. அல்லது, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.

அடுத்து என்ன நடக்கும்?

அடுத்து என்ன நடக்கும்?

சரி, திவால் அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியெனில் கடைசி மனிதன் டெட்ராய்டின் விளக்குகளை அணைத்துவிட்டு விமானமேறிவிடுவானா?

இல்லை... அந்த நிலை வராது என்றே தோன்றுகிறது. முதலில் இந்த திவால் அறிவிப்பை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். அடுத்து நிதி நிலையைச் சீரமைக்கும் வகையிலும் வரையிலும், நகரின் அனைத்து தொழிற்சங்க யூனியன்களுடனும் பேசி, வேலைக் குறைப்புக்கு வழி பார்க்க வேண்டும். நகரின் சில சொத்துகளை விற்றாக வேண்டும்.

பணிகள் குறைப்பு

பணிகள் குறைப்பு

இப்போது டெட்ராய்டில் போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. ஒரு அவசர அழைப்புக்கு முன்பெல்லாம் 11 நிமிடங்களுக்குள் பதில் சொன்ன அல்லது நடவடிக்கை எடுத்த போலீஸ், இப்போது 1 மணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்கிறது. இது இன்னும் கூட மோசமாகலாம். இதேபோல அத்யாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் குறைக்கப்படும். பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். இதில் மோசமான பாதிப்பு பென்ஷனை நம்பிக்கொண்டிருக்கும் சீனியர் சிட்டிசன்களும் டெட்ராய்ட் நகர கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களும்தான்.

"ஆனால் இந்த வீழ்ச்சியை இப்போது எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அப்போதுதான் 60 ஆண்டு வீழ்ச்சிப் பாதையில் பயணித்து இப்போது பூஜ்யத்தில் இருக்கும் டெட்ராய்ட் மெல்ல மெல்ல எழுச்சி பெறும்," என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மிச்சிகன் மாநில கவர்னர் ரிக் ஸ்னைடர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+