மருத்துவ படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
69 சதவீத இடஒதுக்கீடு காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று மாணவி ஹர்சினி வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், 917 ரேங்க் எடுத்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஹர்சினி.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற பினாக்கி சந்திராகோஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு , இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications