தமிழகத்தில் விரும்பத்தாகத நிகழ்வுகளுக்கு காரணம் பாக் தீவிரவாத இயக்க தூண்டுதலே: இல. கணேசன்
சென்னை: பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களில் தூண்டுதலாலேயே தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவின் மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அக்கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் இல. கணேசன் மறியலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் தூண்டுதலால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் டிசம்பர் 6-ந் தேதி தமிழகத்தில் மட்டும் பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.
பா.ஜனதா மற்றும் இந்து இயக்க தலைவர்கள் 11 பேர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் கொலையுடன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சம்பவத்தில் முதல்வர் எடுக்கும் நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications