மதிய உணவுக்கு அழுகிய முட்டைகள்: 1 லட்சம் முட்டைகள் அழிப்பு- ஒப்பந்ததாரர் லைசென்ஸ் ரத்து
ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுக்கு அழுகிய முட்டைகளை சப்ளை செய்த நிறுவனத்தின் உரிமைத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெட்டுப்போன 100000 முட்டைகளை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர்
பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து தமிழக பள்ளிகளில் சத்துணவு பணி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளிகளில் புழுக்கள் நெளியும் அழுகல் முட்டைகள் சப்ளை செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளி மாணவர்களுக்கு மாதனூர் ஒன்றிய அலுவலகம் மூலமாக முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று மஜ்ஹருல் உலூம் தொடக்க பள்ளியில் முட்டை சப்ளை செய்யப்பட்ட போது வேனில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த பெற்றோர் தலைமை செயலாளர் ரூமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர் 1,600 முட்டைகளையும் பரிசோதித்தபோது அனைத்து முட்டைகளும் கரிய நிறத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முட்டைகளை உடைத்து பார்த்ததில் புழுக்கள் நெளிந்தன. வேறு சில பள்ளிகளில் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளையும் பரிசோதித்ததில் அவை அழுகி இருந்ததை பார்த்து பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் ஆம்பூர் சமூக பாதுகாப்பு தாசில்தார் பள்ளிக்கு வந்து முட்டைகளை ஆய்வு செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் அழுகிய முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். இதனிடையே 113 அங்கன்வாடி மற்றும் 110 சத்துணவு மையங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட சுமார் 1 லட்சம் முட்டைகளை அழிக்கப்பட்டது. முட்டையை பரிசோதனை செய்யாமல் பள்ளிகளுக்கு அனுப்பிவைத்த மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் பாலய்யாவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
உரிமம் ரத்து
இந்த நிலையில் ஆம்பூர் பகுதியில் உள்ள 20 பள்ளிகளுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சொர்ணபூமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தினர் முட்டை சப்ளை செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கலெக்டர் சங்கரிடம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அழுகிய முட்டையை சப்ளை செய்த சொர்ணபூமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பள்ளிக்குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவில் முட்டை வழங்கப்படுகிறது. இவற்றை பரிசோதித்து வழங்கவேண்டும் என்பது பெற்றோர்கள், பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications