சீனா: சோடா, பென்சில் வாங்கி தருவதாக கூறி 6 சிறுமிகளை கற்பழித்த காமுகனுக்கு மரண தண்டனை
பீஜிங்: சீனாவில், 9 வயதுக்குட்பட்ட 6 சிறுமிகளை பென்சில், சோடா வாங்கித்தருவதாக ஆசைகாட்டி, கற்பழித்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
சீனாவின் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கூலித் தொழிலாளியான சங் குவிங்ஹய், அப்பகுதியில் வாழும் சிறுமிகளுக்கு சோடா, பென்சில் போன்றவை வாங்கி தருவதாக ஆசை காட்டி அவர்களை ஏமாற்றி கற்பழித்து வந்துள்ளான். அத்தோடு, தான் சிறுமிகளைக் கற்பழித்ததை தனது செல்போனில் பதிவும் செய்து வைத்துள்ளான்.
குவின்ஹய்யின் இந்த பாதகம் குறித்து தெரிய வந்ததும், அப்பகுதி மக்கள் அவன் பேரில், போலீசில் புகார் அளித்தனர். அதனையடுத்து, அக்காமுகனைக் கைது செய்தனர் போலீசார். விசாரணையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களனைத்தையும் ஒப்புக் கொண்டான் குவின்ஹய்.
கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘9 சிறுமிகளின் வாழ்க்கையை நாசப்படுத்திய குற்றத்திற்காக குவிங்ஹய்க்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.
இம்மரணதண்டனை தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குவிங்ஹய் கற்பழித்த 6 சிறுமிகளுமே 5 முதல் 9 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications