மீருட்டில் ஓடும் காரில் +2 மாணவியை கற்பழித்த மாயா கட்சி தலைவர், 3 நண்பர்கள்

Subscribe to Oneindia Tamil

மீருட்: உத்தர பிரதேசத்தில் +2 மாணவியை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மற்றும் 3 பேர் சேர்ந்து ஓடும் காரில் கற்பழித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மீருட்டைச் சேர்ந்த +2 மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு டியூஷனுக்கு சென்றுள்ளார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அமித் பதானா மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் ஒரு எஸ்யூவி காரில் வந்து மாணவியை கடத்தினர். அவர்கள் அந்த மாணவியை ஓடும் காரில் கற்பழித்தனர்.

இது குறித்து அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த சனிக்கிழமை இரவு நான் டியூஷனுக்கு சென்றபோது பதானா, என்னுடைய ஃபேஸ்புக் நண்பர் சுமித் குர்ஜார் மற்றும் 2 பேர் என்னை கருப்பு நிற எஸ்யூவி காரில் கடத்தினர். அவர்கள் காரை நகர் முழுவதும் ஓட்டிக் கொண்டே என்னை கற்பழித்தனர். பின்னர் லக்மை விஹார் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று பதானா மீண்டும் கற்பழித்தார். சுமார் 2 மணிநேரமாக காரில் நான் கற்பழிக்கப்பட்டேன். மறுநாள் மாலை பதானா என் வீட்டுக்கு வந்து நடந்ததை யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் சகோதரனையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார் என்று தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி விகாஸ் சந்த் திரிபாதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+