அவதூறு வழக்கு: வீரபாண்டி ராஜா தலைமறைவு… கைது செய்ய போலீஸ் தீவிரம்…
சேலம்: நகராட்சி தலைவியை அவதூறாக, ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனால் போலீசார் கையில் சிக்காமல் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி பகுதியில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்பதை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான வீரபாண்டி ராஜா, மற்றும் ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நகராட்சி தலைவி உமாராணியை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்த உமாராணி ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரபாண்டி ராஜா மற்றும் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேர் மீதும் அவதூறு வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று இரவு 2 மணியளவில் பூலாவரியில் உள்ள வீரபாண்டி ராஜா வீட்டிற்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் போலீசார் திரும்பிவிட்டனர்.
இதற்கிடையே அவதூறு வழக்கில் கைதாகாமல் இருக்க வீரபாண்டி ராஜா முன்ஜாமீன் பெற முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications