இளவரசர் வில்லியம்-கேட் தம்பதிக்கு ஆண் குழந்தை
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் நேற்று இரவு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேட் மிடில்டன்னை கடந்த 2011ம் ஆண்டு லண்டனில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தை உலக மக்கள் டிவியில் பார்த்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு கேட் கர்ப்பமானார். அவர் கர்ப்பமானதில் இருந்தே அவருக்கு என்ன குழந்தை பிறக்கும், அதற்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.

பிரசவ வலி
கேட் மிடில்டன்னுக்கு நேற்று பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து வில்லியம் தனது மனைவியை கார் மூலம் லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆண் குழந்தை
இந்திய நேரப்படி அதிகாலை 4.24 மணிக்கு கேட் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை 3.8 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.

வில்லியம் பிறந்த அதே மருத்துவமனை
புனித மேரி மருத்துவமனையில் தான் இளவரசி டயானா வில்லியமை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியில் இங்கிலாந்து
கேட்டுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications