கலாநிதி மாறனுடன் மோதல்... ஸ்பைஸ்ஜெட்டிலிருந்து விலகினார் சிஇஓ நீல் மில்ஸ்
டெல்லி: மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து நீல் மில்ஸ் விலகி விட்டார். நிறுவனத் தலைவரான கலாநிதி மாறனுடன் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
சன் டிவி அதிபரான கலாநிதி மாறன்தான், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை வைத்திருக்கிறார்.
குறைந்த கட்டணத்திலான பயணங்களுக்கு இது உறுதி செய்வதால் பிரபலமாகியும் வருகிறது. இந்த நிலையில் அதன் தலைமை செயலதிகாரி விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் ஒன்றரை வருஷ சர்வீஸ் பாக்கி
மில்ஸுக்கு இன்னும் ஒன்றரை வருட பணி ஒப்பந்தம் உள்ளது. ஆனால் முடிவெடுப்பதில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரொம்ப மந்தமாக செயல்படுவதால் அவர் அதிருப்தியடைந்தாராம்.

2010ல் வேலைக்குச் சேர்ந்தார்
2010ம் ஆண்டுதான் இவர் ஸ்பைஸ்ஜெட்டில் இணைந்தார். அதற்கு முன்பு அவர் பிளைதுபாய் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சார் ரொம்ப சீரியஸ்...
மில்ஸ் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறுகையில், மில்ஸ் வேலையில் மிகவும் சீரியஸானவர். சில தினங்களுக்கு முன்புதான் அவர் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அப்படியும் கூட அவர் தொடர்ந்து அலுவலகத்திற்கு தவறாமல் வருகிறார். தனது வேலையை கடமையாகச் செய்கிறார். தான் ரிலீவ் செய்யும் வரை பணியில் சீரியஸாக இருக்கப் போவதாகவும் கூறியுள்ளார் என்றனர்.

வேறு வேலை ரெடி
தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு விமான நிறுவனத்தில் மில்ஸ் புதிதாக சேரப் போகிறாராம்.

ஸ்பைஸ்ஜெட் மெளனம்
மில்ஸ் ராஜினாமா குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அமைதி காக்கிறது. அதுகுறித்து கருத்து தெரிவிக்க அந்த நிறுவனம் மறுத்துள்ளது. வெறும் சந்தை ஊகங்களையும், வதந்திகளையும் வைத்து நாங்கள் கருத்துக் கூற முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2வது பெரிய ராஜினாமா
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில வாரங்களில் சந்திக்கும் 2வது பெரிய ராஜினாமா இதுவாகும். இதற்கு முன்பு அதன் வர்த்தகப் பிரிவு தலைமை அதிகாரி ஹரீஷ் மொய்தீன் குட்டி ராஜினாமா செய்தார்.

நிதி நிலைமை சரியில்லை
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிதி நிலைமை சரியில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இன்டிகோ நிறுவனத்துடன் போட்டி போடும் அளவுக்கு ஸ்பைஸ் ஜெட் துரிதமாக செயல்படவில்லை, முடிவுகள் எடுப்பதில் நிர்வாகத் தலைமை மந்தமாக செயல்படுவதாக உயர் அதிகாரிகள் அதிருப்தியுடன் உள்ளனராம். இதனால்தான் ராஜினாமாக்கள் தொடர் கதையாகியுள்ளதாக கூறுகிறார்கள்.

நஷ்டக்கணக்கு கூடுகிறது
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த 2011-12 நிதியாண்டில் ரூ. 606 கோடி நஷ்டத்தை சந்தித்தது. 2012-13ல் ரூ. 191 கோடியாக இது இருந்தது. நடப்பு நிதியாண்டில் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நஷ்டம் ரூ. 186 கோடியாக இருந்தது.

பெர்பார்மன்ஸ் சரியில்லை
அதேபோல மற்ற விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஸ்பைஸ்ஜெட்டின் செயல்திறனும் சரியில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்டிகோவுடன் மோதவே முடியவில்லை
ஸ்பைஸ்ஜெட் போலவே குறைந்த கட்டணத்தைக் கொண்ட நிறுவனம் இன்டிகோ. ஆனால் அதனுடன் மோத முடியாமல் தவிக்கிறதாம் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ லாபத்துடன் இயங்கி வருகிறது. அதேசமயம், ஸ்பைஸ்ஜெட் நஷ்டத்தையே தொடர்ந்து சந்தித்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications