25 ஆண்டுகளில் இந்து இயக்கங்களைச் சேர்ந்த 148 பேர் கொலை- ராம கோபாலன்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இஸ்லாமிய சமய, சமுதாய, அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் பஷீர், பத்திரிகை பேட்டியில் பா.ஜ.க.வின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையை செய்தவர்கள் முஸ்லீம்கள் எனக்கூறி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் காவல் துறை அதிகாரிகள் குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் தகுந்த பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்து ஆள்ளார்கள்.
எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி காவல்துறை அறிவிக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்! கடந்த 25 ஆண்டுகளாக இந்து இயக்கத்தைச் சேர்ந்த 148 பேரை இதுபோல் கொலை செய்துள்ளனர்.
குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவோ, அல்லது காவல்துறை, அரசு அதிகாரிகளை மிரட்டவோ, திசை திருப்பவோ ஊடகங்களில் இதுபோன்ற கருத்தை பஷீர் பதிவு செய்துள்ளதாக இந்து முன்னணி எச்சரிக்கிறது.
அத்வானியின் ரதயாத்திரையில் பைப் வெடிகுண்டு சதியில் தேடப்பட்ட முதன்மையான, முக்கியமான குற்ற வாளி கைது செய்யப்பட்டது எப்படி? அவனுக்குப் பாதுகாப்பு கொடுத்தது யார்? ஆதாரமில்லாமல் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையையும் காவல் துறை எடுக்க முடியாது என்பது தான் உண்மை!
டாக்டர் அரவிந்த ரெட்டியும், வெள்ளையப்பனும், ஆடிட்டர் ரமேஷும் அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். அவர்கள் கொலையை அடுத்து வேலூரிலும், சேலத்திலும் இயக்கத்தினர் மட்டுமல்ல பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். நற்குடியில் பிறந்து, நாடுபோற்ற வாழ்ந்தவர்கள்.அடுத்து அடுத்து நடந்த இந்த இரண்டு கொடூரக் கொலைகளைப் பார்த்தத் தமிழக மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications