காசு, பணம், துட்டு.... மணி! மணி!!.. 10 நிமிடத்தில் ரெடி!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போஸ்ட்மேன் சார் என் பையன் பணம் அனுப்பியிருக்கேன் சொன்னான் அது வந்துருச்சா? என்று இனி கேள்வி கேட்க வேண்டாம். பணத்திற்காக நாள் கணக்கில் காத்திருக்கவும் வேண்டாம். 10 நிமிடத்தில் பணம் அனுப்ப, பெற வசதியை செய்துள்ள இந்திய தபால் துறை.

தற்போது தபால் அலுவலகங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. வழக்கமான மணி ஆர்டர் சேவையில் பணம் அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க இரண்டு நாட்கள் ஆகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு அனுப்பினால் மூன்று நாட்கள் ஆகிறது.

இதில் தந்தி மணி ஆர்டர் என்ற சேவையில் விரைவாக பணம் அனுப்பினால் ஒரே நாளில் பணம் கிடைத்து விடுகிறது.

இணையதள மணி ஆர்டர்

இணையதள மணி ஆர்டர்

இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்தில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும்.

ரகசிய குறியீட்டு எண்

ரகசிய குறியீட்டு எண்

இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் போது தபால் நிலையத்தில், பணம் அனுப்புபவரிடம் கொடுக்கப்படும் ரசீதில் 16 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அடையாள அட்டை அவசியம்

அடையாள அட்டை அவசியம்

அந்த எண்ணை, மறுமுனையில் பணம் பெறுபவருக்கு தொலைபேசி அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர், தபால் நிலையத்துக்கு சென்று, உரிய அடையாள அட்டையை காண்பித்து, 16 இலக்க எண்ணை தெரிவித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

10 நிமிடத்தில் பணம்

10 நிமிடத்தில் பணம்

இந்த சேவையின் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் 10 நிமிடத்தில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். நகரங்களில் வேலை பார்க்கும் மகன்கள் உடனடியாக ஊருக்கு பணம் அனுப்ப இனி இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேவைக்கட்டணம் குறைவுதான்

சேவைக்கட்டணம் குறைவுதான்

இந்த சேவையில், ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகைக்கு ரூ.100 மணியார்டர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 ஆயிரத்து ஒரு ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவதற்கு ரூ.110-ம், 30 ஆயிரத்து ஒரு ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவதற்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தபால் துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+