தூத்துக்குடியை கலக்கிய கொள்ளை கும்பல் கைது: ரூ.1.20 கோடி நகை, பணம் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்ட 14 கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழிப்பறி, வீடுகளை உடைத்து நகை, பணம், செல்போன்கள், கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்மகும்பல் கொள்ளையடித்து வந்தது.

இது தவிர தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகைகளை பறித்து செல்லுதல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வந்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடந்து வந்த நகைபறிப்பு, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
இதனையடுத்து கொள்ளையர்களை கைது செய்திட நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை ஆகியோரின் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பழனிக்குமார், ஞானசேகரன், ராஜேந்திரன், பெஸ்கி, நாராயணன், தனிப்படை துணை ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சிக்கியவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீசாரிடம் சிக்கிய ராஜேஷ், ரூபன், மிக்கேல் உள்ளிட்ட 14 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாவட்டத்தில் நடந்த 41 கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து 59 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி பொருட்கள், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 லாரிகள், ரூ.11,000 ரொக்கம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களை பிடித்து அவர்களிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை திறம்பட மீட்ட தனிப்படையினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை ஆகியோர் பாராட்டினர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications