'ஜெ புகழை தாங்க முடியல கருணாநிதியால!' - யாரது..? ஓ.. சரத்குமாரா!
சென்னை: காவிரி, நெய்வேலி நிலக்கரி பங்குகள் போன்ற விவகாரங்களில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த புகழை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
சரத்குமார் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்தான் இப்படிக் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பால் வார்த்த அன்னை
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசின் கெஜெட்டில் வெளியிட்டு காவிரி பாசன விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது.

ஆக்கப்பூர்வ நடவடிக்கை
இலங்கை பிரச்சினையில் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களைத் துடைத்திடும் வகையில் ராஜபக்சே மீதும், இலங்கை அரசு மீதும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. கூடங்குளம் பிரச்சினையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தடுத்து நிறுத்திய உறுதி
சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு திறக்கப்படும் வால்மார்ட்டை தமிழகத்தில் நுழையவிடாமல் உறுதியாக தடுத்து நிறுத்தியது என தி.மு.க. ஆட்சியில் எவற்றை எல்லாம் செய்யாமல் பல்வேறு பிரச்சினைகளில் இரட்டை வேடம்போட்டார்களோ அவற்றில் எல்லாம் உறுதியாக நடவடிக்கை எடுத்து வருபவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

மாபெரும் வெற்றி
என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசே வாங்கிக்கொள்ளும் என்று அறிவித்து, மத்திய அரசிடமும் ஒப்புதல் பெற்று மாபெரும் வெற்றி கண்டுள்ளார். தமிழர்களின் இதயங்களில் தொடர்ந்து நன்மதிப்பைப் பெற்று வரும் முதல்-அமைச்சரின் புகழை கண்டு பொறுக்க முடியாத தி.மு.க. தலைவர் கருணாநிதி நல்ல முயற்சியை கேலியும், கிண்டலும் செய்துள்ளது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications