திமுகவை ஸ்டாலினே அழித்துவிடுவார்: பரிதி இளம்வழுதி
கரூர்: தி.மு.க.,வை அழிக்க, வெளியில் இருந்து யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலினே போதும் அவரே தி.மு.க.வை அழித்து விடுவார் என முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சாபம் விட்டார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம், கரூர் 80 அடி ரோட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் அப்போது கூறியதாவது:
நான் தி.மு.க.வில் இருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவை, திட்டியுள்ளேன். இருந்தாலும், நான் அதிமுகவுக்கு வருகிறேன் என்று கூறியபோது, அவர், என்னை தாய் உள்ளத்தோடு அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார்.
அண்ணா இறந்த பிறகு, நெடுஞ்செழியன் தான் முதல்வராக வருவார் என தி.மு.க., வினரும், பத்திரிக்கைகளும் கணித்தனர். ஆனால், எம்.ஜி.ஆர்.தயவால் கருணாநிதி முதல்வராக வந்தார். பிறகு, எம்.ஜி.ஆரையே கட்சியை விட்டு நீக்கினார்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால், அதில் கூட ஒரு நோக்கம் இருந்தது.அது என்னவென்றால், கேபிள் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொண்டனர்.
ஹிந்தி தெரிந்ததால், தயாநிதி மாறனுக்கும், ஆங்கிலம் தெரிந்ததால், கனிமொழிக்கும் எம்.பி., சீட் கொடுத்ததாக கருணாநிதி கூறினார். ஆனால், எங்களை போன்றவர்களை தமிழை தவிர வேறு எந்த மொழியையும் படிக்க விடாமல் அரசியல் நடத்தியவர் கருணாநிதி.
தி.மு.க.,வை அழிக்க, வெளியில் இருந்து யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி புதல்வரான மு.க.ஸ்டாலின் ஒருவரே தி.மு.க.வை அழித்து விடுவார்.
அண்ணாதுரை எழுதிய நூல்களை அரசுடைமை ஆக்கினால், அவரது எழுத்துக்கள் மக்களை சென்று சேர்ந்து விடும் என தடுத்தவர் கருணாநிதி. ஆனால், முதல்வர் ஜெயலலிதாதான், அண்ணாதுரை எழுதிய நூல்களை அரசுடையாக்கி, அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாயை கொடுத்தார்.
என்.எல்.சி., விவகாரம், காவிரி நீர் பிரச்சனை, கச்சத்தீவு மீட்பு முயற்சி, மீத்தேன் திட்டத்துக்கு தடை போன்ற பல நடவடிக்கை மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வரும் 2014 ம் ஆண்டு எம்.பி. தேர்தலுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக வரும் தகுதியும், திறமையும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார் பரிதி இளம் வழுதி.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications