எங்கள் ரத்தத்தைக் உறிஞ்ச வந்த புதிய 'அட்டை' வில்லியமின் குழந்தை - ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்
மாஸ்கோ: ரஷ்யர்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டையாகத்தான் இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை நான் பார்க்கிறேன். இந்தக் குழந்தையை நான் வெறுக்கிறேன் என்று கடுமையாக பேசியுள்ளார் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் விலாடிமிர் ஜிரினோவ்ஸ்கி.
ரஷ்யர்களின் ரத்தத்தை மேலும் உறிஞ்சுவதற்காகத்தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் வர்ணித்துள்ளார்.
ரஷ்ய அரசியலில் கரடு முரடான அரசியல்வாதியாக வலம் வரும் ஜிரினோவ்ஸ்கி இப்படிப் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொண்டாடாதீர்கள்
இதுகுறித்து ஜிரினோவ்ஸ்கி கூறுகையில் 21ம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் குழந்தையாக இது இருக்கப் போகிறது. எனவே இதன் பிறப்பை ரஷ்யர்கள் கொண்டாடக் கூடாது, வரவேற்கக் கூடாது.

ரஷ்யாவை அழித்து விடும்
இந்தக் குழந்தை பிறப்பு குறித்து நான் கவலைப்படவே இல்லை. இது ரஷ்யர்களை அழிக்க வந்துள்ள குழந்தை.

எங்களை அழித்தவர்கள் இங்கிலாந்துக்காரர்கள்
ரஷ்யாவை அழித்தவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். எனவேதான் இந்தக் குழந்தையின் பிறப்பை எங்களால் கொண்டாட முடியவில்லை.

இன்னும் ஒரு 'அட்டை...'
எங்களது ரத்தத்தைக் குடிக்க வந்திருக்கும் புதிய அட்டையாகத்தான் இந்தக் குழந்தையை நான் பார்க்கிறேன் என்றார் அவர்.

ஆனால் அரசு வரவேற்பு
ஆனால் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை வரவேற்றுள்ளது ரஷ்ய அரசு. இதுதொடர்பாக வில்லியமின் பாட்டியான ராணி எலிசபெத்துக்கு ரஷ்ய அரசு வாழ்த்தையும் தெரிவித்துள்ளது.

ஏன் இந்த காண்டு...?
இங்கிலாந்து மற்றும் ரஷ்ய ராஜ குடும்பங்களுக்கு இடையே முன்பு உறவு இருந்தது. இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மூலமாக வந்த உறவு இது. இவர், இரண்டாம் ஜார் மன்னன் நிக்கோலஸின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

1917ல் வீழ்ந்த ரோமனோவ் சகாப்தம்
1917ம் ஆண்டு ரஷ்யாவில் ரோமனோவ் வம்சம் அழிந்ததற்குக் காரணமே ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்தான் என்பது பல ரஷ்யர்களின் குற்றச்சாட்டாகும்.

இங்கிலாந்து மன்னரிடம் ஒப்படைத்த ஜார் மன்னன்
2ம் ஜார் மன்னன் நிக்கோலஸ், அந்த சமயத்தில் ரமனோவ் வம்சத்தின் ஆட்சியை எடுத்து நடத்த முடியாத நிலையில் இருந்தார். இதையடுத்து தனது சகோதரரான இங்கிலாந்தின் இளவரசர் மிக்கேல் அலெக்சாண்ட்ரோவிச்சிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அதன் பிறகு ஆளுநரை நியமித்தார் மிக்கேல். அத்தோடு ரோமனோவ் வம்த்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்பது வரலாறு.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications