ரூ.5 லட்சம் கொடுங்க, ஏர்வாடா சிறைக்குள் இப்படி போயிட்டு, இப்படி வாரேன்: மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.

Subscribe to Oneindia Tamil

Can break into Yerwada jail in Rs 5 lakh, claims MLA
மும்பை: ரூ.5 லட்சம் கொடுத்தால் புனேவில் உள்ள ஏர்வாடா சிறைக்குள் அத்துமீறி சென்று வருவேன் என்று மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏ. அனில் கோடே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே தொகுதி எம்.எல்.ஏ. அனில் கோடே. டெல்கி முத்திரைத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்டு புனே ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் அவர் சட்டசபையில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலிடம் கூறுகையில்,

ரூ.5 லட்சம் கொடுத்தால் ஏர்வாடா சிறைக்குள் அத்துமீறி சென்று வருவேன். நான் அந்த சிறையில் 4 ஆண்டுகள் இருந்துள்ளேன் என்றார்.

புனே சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன்கள் மற்றும் இதர பொருட்கள் சட்டவிரோதமாக உள்ளது பற்றி புனே தொகுதி பாஜக எம்.எல்.ஏ. மாதுரி மிஸால் கேள்வி எழுப்பியபோது அனில் இவ்வாறு தெரிவித்தார்.

சிறையில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜாம்மர்கள் வைக்கும் பணி நடந்து வருவதாக பாட்டீல் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட அனில் சிறையின் சுவர்களுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும் என்றார். சிறை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் ரவுடி கும்பல்களிடம் பணம் வாங்குகின்றனர். வரிசையில் நின்று அவர்களின் பங்கை பெறுகின்றனர். இதில் நீங்கள் பதுகாப்பை பற்றி பேசுகிறீர்கள். எனக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள், ஏர்வாடா சிறைக்குள் அத்துமீறி சென்று வருவேன் என்று அனில் தெரிவித்தார்.

சிறை கண்காணிப்பாளர் சட்டவிரோத செயல்களை செய்பவர்களிடம் இருந்து மாதம் ரூ.25,000 பெறுகிறார் என்றார் அனில். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று பாட்டீல் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+