மேற்கு வங்காளத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தூக்கு போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பக்கத்து வீட்டு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நைகாட்டி என்ற இடத்தில் ஒரு வீட்டில் 17 வயது இளம் பெண் தனது தம்பியுடன் வசித்து வந்தாள்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த கவுதம் பஸ்வான் என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்து இளம் பெண்ணின் சகோதரனை வெளியே அடித்து துரத்தி விட்டு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டான்.
இதனால் மனம் உடைந்த அந்தப் பெண் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications