தெளிவான எதிர்கால சிந்தனையோடு... மீண்டும், படிப்பை தொடர விரும்பும் ‘தர்மபுரி’ திவ்யா
சென்னை: தர்மபுரி திவ்யா தன் படிப்பை மீண்டும் தொடர விரும்புவதாகவும், எதிர்காலம் பற்றிய, உறுதியான எண்ணத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கவுன்சிலிங் அளித்த டாக்டர்கள் குழு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
காதல் அதனைத் தொடர்ந்து கலப்புத் திருமணம் செய்து கொண்ட தர்மபுரி இளவரசன் - திவ்யா ஜோடியால் தர்மபுரியில் பெரிய கலவரம் வெடித்தது. தலித் மக்களின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. திவ்யாவின் அப்பா நாகராஜன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் திவ்யா குறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் திவ்யாவின் தாயார். முதலில் தாயாருடன் செல்ல மறுத்த திவ்யா, ஒரு கட்டத்தில் இளவரசனுடன் வாழ விருப்பமில்லை எனக் கூறி தாயாருடன் சென்றார்.

இளவரசன் மரணம்...
திவ்யா வாழ மறுத்த மறுநாள் காலை, அதாவது ஜூலை 4ம் தேதி தர்மபுரி அரசு கல்லூரி அருகே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார் இளவரசன். இதனைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போன திவ்யா, சாப்பிட மறுத்து அழுது கொண்டே இருந்ததாக அவரது அம்மா தெரிவித்தார்.

அழுது புரண்ட திவ்யா...
இளவரசன் மரணம் கொலையா, தற்கொலையா என விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தன்னால் தான் என இவ்வளவு பிரச்சினையும் என திவ்யா ஒருபுறம் புலம்பிக் கொண்டே இருப்பதாக தெரிய வந்தது.

கவுன்சிலிங்...
இதனால் அவர் விருப்பப்பட்டால், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. திவ்யாவும் அவரது குடும்பத்தினரும் கவுன்சிலிங்கிற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் கடந்த வாரத்தில் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

ஒத்துழைப்பு...
கவுன்சிலிங் குறித்த அறிக்கையை சென்னை ஹைகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர் மருத்துவர்கள். அதில், தர்மபுரி, அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும், மனநலத் துறையின் தலைவருமான, டாக்டர் ரவிசங்கர் அளித்த அறிக்கையில், டாக்டர் ரவிசங்கர், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இணைப் போராசிரியர் டாக்டர் சபிதா, உதவிப் பேராசிரியர் சாந்தி ஆகியோர் அடங்கிய குழு, திவ்யாவை பரிசோதித்தது. இரண்டு நாட்களில், நான்கு மணி நேரம் கவுன்சிலிங் நடந்தது; திவ்யா ஒத்துழைப்பு அளித்தார்.

படிப்பைத் தொடர விருப்பம்...
தகவல்களை தெளிவாக கூறினார்.படிப்பைத் தொடர விரும்புகிறார். எதிர்காலம் பற்றி உறுதியான எண்ணத்துடனும் உள்ளார். நம்பிக்கை தரும் எதிர்காலத்தை பற்றி, அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. கவலையில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள், அவருக்கு கற்றுத் தரப்பட்டது.

இப்போதைக்கு போதுமானது...
நடைமுறை வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில், பயிற்சி வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிக்குப் பின், நன்றாக இருப்பதாகவும், திருப்திகரமாக இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். இதுவே தற்போது போதுமானது என்றும் தெரிவித்தனர்.

இளவரசன் குடும்பத்தினர்...
எதிர்காலத்தில் தேவைப்பட்டால், உள்ளூர் மனநல மருத்துவரை தொடர்பு கொள்வதாகவும் கூறினர்.இளவரசனின் பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது, இளவரசனின் இறுதி சடங்குக்கான பணியில் இருப்பதாக தெரிவித்தனர் என இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications