72 ஆண்டுக்கு முன் மூழ்கிய இங்கிலாந்து கப்பல்: ரூ 250 கோடி இந்திய வெள்ளிக்கட்டிகள் மீட்பு
லண்டன்: சுமார் 72 ஆண்டுகளுக்கு முன்னர் புயலில் சிக்கி கடலில் மூழ்கிய இங்கிலாந்து கப்பல் ஒன்றிலிருந்து, தற்போது 61 டன் வெள்ளி மீட்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ250 கோடி ஆகும்.
ஏராளமான மதிப்புமிகுந்த பொருட்களோடு இந்தியாவில் இருந்து 1941ம் ஆண்டு புறப்பட்ட இங்கிலாந்து சரக்குக் கப்பல் ஒன்று அட்லாண்டிக் கடலில் எதிர்பாராத விதமாக மூழ்கியது.
அக்கப்பலின் பெயர் எஸ்.எஸ்.கய்ர்சோப்பா. அக்கப்பல் முழுவதும் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி, இரும்பு தாது மற்றும் தேயிலை சரக்கு நிரம்பியிருந்தது.

ஜலசமாதி....
அட்லாண்டிக் கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கப்பலின் எரிபொருள் தீர்ந்தது. கடற்புயலும் அதோடு கைகோர்த்துக் கொள்ள 20 நிமிடங்களில் கப்பல் இருந்த சுவடே தெரியாமல் ஜலசமாதி அடைந்தது.

மூழ்கிய கப்பல்....
சுமார் 400 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் அயர்லாந்து அருகே மூழ்கியது.

தேடுதல் வேட்டை...
கப்பலில் இருக்கும் பொருட்களை மீட்டெடுக்கும் ஒப்பந்தம் ஒடிசா மெரைன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டதையடுத்து அந்நிறுவனம் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.

வெள்ளிக்கட்டிகள்.....
தீவிர தேடுதலின் பயனாக தற்போது, அக்கப்பலில் இருந்து ஒவ்வொன்றும் சுமார் 1100 அவன்ஸ் எடையுள்ள 2,792வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்...
அதன் மொத்தஎடை சுமார் 61 டன் ஆகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ250 கோடி எனத் தெரிகிறது.

கொள்ளை லாபம்...
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கப்பலில் மீட்கப்படும் பொருட்களில் 80% மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஓடிசி நிறுவனத்திற்கும்,மீதம் உள்ள 20% இங்கிலாந்து அரச கருவூலத்திற்கும் சொந்தம்.

அல்வா தானா...
அப்போ இந்தியாவிற்கு.... ‘அல்வா' தானா?
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications