சின்ன 'ராசா'வுக்கு பெயர் வச்சாச்சு... ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்குப் பிறந்துள்ள ஆண் குழந்தைக்குப் பெயர் வைத்து விட்டது ராஜ குடும்பம்.

இக்குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் என்று உலகம் முழுவதும் பெரிய அளவில் பெட்டிங்கே நடந்தது. குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் பெட் கட்டி வந்தனர்.

இதில் ஜார்ஜ், அலெக்சாண்டர், லூயிஸ் என்ற பெயர்களே முன்னணியில் இருந்தன. இந்த நிலையில் இந்த மூன்று பேரையும் சேர்த்து குட்டிப் பாப்பாவுக்குப் பெயர் வைத்துள்ளது ராஜ குடும்பம்.

Royal baby named George Alexander Louis: palace

இதுகுறித்து இங்கிலாந்து அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தங்களது குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என்ற பெயரை சூட்டியுள்ளனர். இக்குழந்தை கேம்பிரிட்ஜ் இளவரசன் ஜார்ஜ் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர் சூட்டல் மூலம், என்ன பெயர் என்ற பெரும் எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்து குழந்தைக்கு எப்ப பல் முளைக்கும் என்று பெட்டிங்கை ஆரம்பிப்பார்களோ...??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+