அதிமுக எம்.பிக்கள், டி.ராஜா எம்பிக்களாக பதவியேற்பு: கனிமொழி ஆகஸ்ட் 5ல்!
டெல்லி: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்ட 5 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.ராஜா, அ.தி.மு.க.வை சேர்ந்த மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த மைத்ரேயன் உள்பட 5 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன் உள்ளிட்ட பலரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

தமிழில் பதவியேற்பு
அதிமுக எம்.பிக்கள் மைத்ரேயன், அர்ஜுனன், ரத்தினவேலு, லட்சுமணன் ஆகியோர் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகஸ்ட் 5ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications