‘கிளிமூக்கு’ மீனுக்கு டாட்டூஸ் குத்தும் சீன வாஸ்துப் பிரியர்கள்...
பீஜிங்: ‘வாஸ்து' மீன்களை நமக்கு அறிமுகப்படுத்திய சீனர்கள், தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்கள். அதாவது, வாஸ்து மீனுக்கே ‘ வாஸ்துடாட்டூஸ்' குத்தி விற்பனை செய்கிறார்கள்.
நம்மூரில் ‘என்னைப் பார் யோகம் வரும்', ‘கண்ணைப் பார் சிரி' என்றெல்லாம் அதிர்ஷ்டப் படங்களை மாட்டி வாஸ்து பார்த்த நமக்கு, வாஸ்து மீன்கள் என்ற ஒன்றை அறிமுகப் படுத்தியதே சீனர்கள் தான்.
அதை நம்பி, லட்சக் கணக்கில் காசு கொடுத்து படா, சோட்டா சைஸ்களில் பலர் வீடுகளில் வாஸ்து மீன் வளர்த்து வருகிறார்கள். இன்னும் இந்தியாவிற்கு இந்த வாஸ்து டாட்டூஸ் மீன்கள் வரவில்லை என்ற போதிலும், சீனாவில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த வியாபாரம்.

மீன் வளர்த்தால் செல்வம்...
சீனாவின் செங்டு பகுதியில் கிளிமூக்கு மீன்கள் அதிகம். பொதுவாக சீனர்களுக்கு மீன் வளப்பது என்பது பொழுது போக்கையும் தாண்டி, செல்வம் கொழிக்கும் நம்பிக்கை வாஸ்து.

ராசியோ ராசி...
முன்பு, வெறும் வாஸ்து மீன்களை வைத்தாலே ராசி என்ற கோட்பாட்டை சற்று மாற்றி, மீனின் உடம்பில் வாஸ்து டாட்டூஸ் போட்டால் ராசியோ ராசி என சொல்கிறார்கள் சீனர்கள்.

விதவிதமான டாட்டூஸ்...
இந்த கிளிமூக்கு மீன்களின் உடம்பில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பல வண்ணங்களில் டாட்டூஸ் குத்தி தருகிறார்கள்.

விருப்பத்திற்கேற்ப...
தொழில் செய்யும் இடங்களில் வைக்கப் படும் மீன்களின் உடலில், ‘ முதலாளை, இனி உங்க வியாபாரம் சிறப்பாக இருக்கும்..' என்பது போன்ற வாசகங்களும், வீட்டு உபயோகத்திற்கு என்றால் மகிழ்ச்சி, வெற்றி போன்ற வார்த்தைகள், சில சின்னங்கள், ராசியான எண்கள் என டாட்டூஸ் போட்டு தருகிறார்கள்.

போட்டா போட்டி...
இந்த வாஸ்து டாட்டூஸ் மீன்களை வளர்த்தால் வளம் பெருகுவதாக செய்யப்படும் விளம்பரத்தால், விலையைப் பற்றி கவலைப் படாமல் மீனை வாங்கப் போட்டி போடுகிறார்களாம் சீனர்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications