5 மாநில சட்டசபை தேர்தல்.. குற்றப் பின்னணி இருப்போருக்கு 'சீட்' இல்லை: ராகுல்

குற்றப் பின்னணி உடையவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட மாட்டாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லியில் நேற்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் குற்றப் பின்னணி உடையோருக்கு சீட் வழங்க முடியாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை டெல்லி மேலிடமோ மாநில தலைமையகங்களோ முடிவு செய்யாது. கட்சியின் அடிமட்டத்தில் இருப்போருக்குத்தான் ஒரு வேட்பாளரின் முழு பின்னணி தெரியும் என்பதை கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வு நடைபெறும் என்று ராகுல் கூறியிருக்கிறார்.
டெல்லிக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஷகீல் அகமது, சத்தீஸ்கர் பொறுப்பாளர் ஹரிபிரசாத், மத்திய பிரதேச பொறுப்பாளர் மோகன் பிரகாஷ், ராஜஸ்தான் பொறுப்பாளர் குருதாஸ் காமத், மிசோராம் பொறுப்பாளர் லூசினோ ஃபளேரியோ ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications