பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் சாய்குமார்!
ஹைதராபாத்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக நடிகர் சாய்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழில் அந்தப்புரம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்குமார். வேட்டிய மடிச்சுக்கட்டு, திருவண்ணாமலை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார்.
இவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில், "இன்றைக்கு அரசியல் என்பது வயதானவர்களும், பணக்காரர்களும் இருக்கும் இடமாகிவிட்டது.
இந்த நிலை மாற வேண்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்மல்லாபுரா தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறேன். அக்கட்சி சார்பில் எனக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தேர்தலில் டிக்கெட் கிடைக்கா விட்டால் பாரதீய ஜனதா கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன். குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவரையே பிரதமராக அறிவிக்க வேண்டும். அவரது தலைமைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது," என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications