2 ஆண்டுகள் 'இதயம்' இல்லாமல் வாழ்ந்து இங்கிலாந்து மனிதர் சாதனை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் இதயம் இல்லாமல் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மாத்யூ கிரீன்(42). பார்மசுட்டிகல் ஆலோசகர். அவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் கிரீனின் இதயம் கார்டியோமயோபதி என்னும் நோயால் செயல் இழந்தது. இதையடுத்து கேம்பிரிட்ஷையரில் உள்ள பாப்வொர்த் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் இதயம் நீக்கப்பட்டு இயந்திரத்தின் உதவியுடன் அவரின் ரத்தம் பம்ப் செய்யப்பட்டது. அவரது முதுகுக்கு பின்னால் ஒரு பையில் பம்ப் செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டது. பேட்டரியில் இயங்கும் இயந்திரத்தின் உதவியுடன் அவர் 3 மணிநேரம் வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் இந்த இயந்திரத்தை 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் ரத்த உறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய 6 அடி 3 அங்குல உயரமுள்ள கிரீனுக்கு ஏற்ற இதயம் கிடைக்கவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் தான் கிரீனுக்கு ஏற்ற இதயம் கிடைத்தது.

இதையடுத்து பாம்ப்வொர்த் மருத்துவமனையில் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+