பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர்- குற்றவாளிக்கான தண்டனை நாளை ஒத்திவைப்பு!
டெல்லி: டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் சம்பவத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றவாளி ஷாஹ்சத் அகமதுவுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லியில் 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா நகர் பகுதியில் பாட்லா ஹவுஸ் எனும் குடியிருப்பில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 7 பேர் பதுங்கியிருப்பதாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஷாஹ்சத் என்ற தீவிரவாதி மட்டும் கைது செய்யப்பட்டார்.
இந்த மோதலில் டெல்லி என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் மோகன்சந்த் சர்மாவும் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டர் இப்போதும் கடும் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாஹ்சத், குற்றவாளி என கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் ஷாஹ்சத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications