மோடி கடித விவகாரம்.. திமுக எம்பிக்கள் கையெழுத்து போலி.. உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர திட்டம்!
டெல்லி: மோடிக்கு விசா தரக் கூடாது என்று அமெரிக்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடித விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட்டில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர திமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்து வருகிறது. மோடிக்கு விசா வழங்கவே கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளின் 65 எம்.பிக்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் அண்மையில் அமெரிக்கா சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் மோடிக்கு விசா பெற்றுவிடுவதில் மும்முரம் காட்டினார். இதனால் மீண்டும் கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட அதே கடிதம் அமெரிக்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள தங்களது கையெழுத்துகள் மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி, திமுகவின் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் மறுத்தனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதியும் தமது கட்சி எம்.பி.க்கள் எவரும் அதில் கையெழுத்திடவில்லை.. அப்படி கையெழுத்திட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனோ தாம் கையெழுத்திட்டது உண்மை என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்காவின் தடவியல் துறையினர் இக்கடிதம் உண்மையானது என்று கூறியிருந்ததது.
தற்போது திமுகவின் லோக்சபா எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவன், பார்லிமென்ட்டில் மழைக்கால கூட்டத் தொடரில் இது தொடர்பாக எமது எம்.பிக்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். எங்களது எம்.பி.க்களின் கையெழுத்துகள் மோசடியாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது என்றார்.
"ஈழத் தமிழர் பிரச்சனை போன்ற வேறு சில மனுக்களில் நாங்கள் கையெழுத்திட்டிருந்தோம். அக்கையெழுத்தை மோடிக்கு எதிரான கடிதத்தில் பயன்படுத்தி உள்ளனர். நான் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு கையெழுத்திட்டது நினைவு இருக்கிறது. நிச்சயமாக மோடி விவகாரத்தில் கையெழுத்திடமாட்டேன். அப்படி ஒரு மனுவுடன் ஒருவர் என்னை அணுகினால் கட்சித் தலைமையை அணுகுமாறுதான் நான் கூறுவேன்" என்று பெயர் வெளியிட விரும்பாத திமுக எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications