தொங்கு பார்லிமென்ட்! தே.ஜ.கூட்டணிக்கு கூடுதல் இடங்கள்: கருத்துக் கணிப்பு!

அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய சூழலில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 172 முதல் 180 இடங்கள் வரை கைப்பற்றும். அக் கூட்டணி 29% வாக்குகளைப் பெறும். இக்கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியானது 156-164 இடங்களைக் கைப்பற்றலாம். அதாவது 27% வாக்குகள் கிடைக்கும். கடந்த தேர்தலில் 18.8% வாக்குகள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் கூட்டணிக் கட்சிகள் 13-19 எம்.பிக்கள் (2%) வரை வெல்லலாம். கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சிகள் 2.7% வாக்குகளைக் கொண்டு சேர்த்திருந்தன.
காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது 149 முதல் 153 இடங்களையே கைப்பற்றும். இக் கூட்டணி கடந்த தேர்தலில் 36% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது 29% வாக்குகள் கிடைக்குமாம்.
இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 28% வாக்குகள் கிடைக்கலாம். அதாவது முந்தைய தேர்தலைப் போல அதன் வாக்கு சதவீதம் இருக்கும். ஆனால் முந்தைய தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகள் மூலம் கிடைத்த 3% வாக்குகள் இம்முறை 1% ஆகக் குறையக் கூடும்.
இந்த இரண்டு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் 42% வாக்குகள் கிடைக்கும்.
இதில் பகுஜன் சமாஜ் கட்சி 15-19 இடங்களையும் (6%) இடதுசாரிகள் 22-28 (6%)இடங்களையும் பெறும். சமாஜ்வாடி கட்சி 4% வாக்குகளைப் பெற்று 17- 21 இடங்களைக் கைப்பற்றலாம்.
மத்தியில் ஆட்சி அமைக்க 273 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் சரி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் சரி சுமார் 100 இடங்கள் கூடுதலாக தேவை. இதனால் இதர கட்சிகள் ஆதரவின்றி எந்த ஒரு தேசிய கட்சியும் மத்தியில் ஆட்சி அமைத்துவிட முடியாது என்பது இம்முறையும் நிதர்சனம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications