ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு.. குற்றப்பத்திரிகையில் தாவூத், ஸ்ரீசாந்த் பெயர்கள்!

Subscribe to Oneindia Tamil

Dawood Ibrahim and Sreesanth
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் பிக்ஸிங் விவகாரத்தில் இன்று டெல்லி போலீசார் தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, சவான் உள்ளிட்ட 30 பேர் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

6வது ஐபிஎல் கிரிக்கெட் பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள், ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோருடன் ஏராளமான சூதாட்ட புக்கிகள் சிக்கி கைதாகினர். இதில் ஸ்ரீசாந்த், சவான் உட்பட 21 பேருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.

இந்த பிக்ஸிங் வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் கமிஷனரின் பதவிக் காலம் வருகிற 31ந் தேதி முடிவடடய உள்ள நிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இக் குற்றப்பத்திரிகையில் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சாண்டிலா ஆகியோருடன் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராஹீம், சோட்டா ஷகீல் என மொத்தம் 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+