இட ஒதுக்கீட்டைத் தூக்கி குப்பையில் போட்ட சென்னை ஐஐடி... சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
சென்னை: அரசின் இட ஒதுக்கீட்டை சற்றும் மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு ஆசிரியர்களை நியமித்துள்ளது சென்னை ஐஐடி. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அத்தனை 1995 முதல் 2000மாவது ஆண்டு வரை செய்யப்பட்ட அத்தனை நியமனங்களையும் விரிவாக விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
ஐஐடி நிர்வாகம் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சற்றும் மதிப்பதில்லை என்று முன்பே புகார்கள் எழுந்தன. ஆனால் இந்த முறைதான் அது வகையாக மாட்டியுள்ளது.
மேலும் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகவும் சென்னை ஐஐடி தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் நியமனத்தில் அது சிக்கியுள்ளது.

டாக்டர் வசந்தா தொடர்ந்த வழக்கு
டாக்டர் டபிள்யூ. பி. வசந்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

1995 முதல் முறைகேடான நியமனம்
அதில், கடந்த 1995ம் ஆண்டு முதல் பல்வேறு ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. இவை அனைத்தும் முறையாக நிரப்பப்படவில்லை. குறிப்பாக இதில் கடைப்பிடிக்கப்பட்ட தேர்வுமுறை சட்டவிரோதமானது.

நியமனங்களை ரத்து செய்க
எனவே இந்த நியமனங்கள் அனைத்தையும் பரிசீலித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும். புதிய நியமனங்களுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார் டாக்டர் வசந்தா.

ஐஐடி தலைவர், இயக்குநர்களுக்கு நோட்டீஸ்
வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றார். மேலும், இதுதொடர்பாக ஐஐடி சென்னையின் தலைவர், இயக்குநர்கள் குழு, இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஒதுக்கீட்டை பின்பற்றி நியமனம்
மேலும் டாக்டர் வசந்தாவை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் உதவிப் பேராசிரியர் பதவி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
மேலும் 1995 முதல் 2000 மாவது ஆண்டு செப்டம்பர் 26 வரையிலான அனைத்து பணி நியமனங்கள் குறித்தும் சிபிஐ விரிவான விசாரணை நடத்த வேண்டும். இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications