லோக்சபா தேர்தல்: காங். படுதோல்வி- பாஜகவுக்கு ஆறுதல் இடங்களே- டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் 228 இடங்களைப் பெற்றிருந்தது. ஆனால் தற்போது தேர்தல் நடைபெற்றால் 136 இடங்கள்தான் கிடைக்கும். இதில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை 206 இடங்களைக் கைப்பற்றியது. இம்முறையோ 119 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸுக்கு கிடைக்குமாம். அதாவது 87 தொகுதிகள் காங்கிரஸ் 'கையை'விட்டு போய்விடும்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த தேர்தலில் 132 இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை சற்றே ஆறுதலாக 156 இடங்களைக் கைப்பற்றலாம். இதில் பாரதிய ஜனதா கட்சி கடந்த முறை 116 இடங்களைப் பெற்றிருந்தது. இம்முறை கூடுதலாக 15 தொகுதிகள் வரை அதாவது 131 தொகுதிகள் வரை கிடைக்கலாம்.
உத்தேச 3வது அணிக்கு 116 இடங்கள்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத இதர கட்சிகளை அதாவது 3வது அணி ஒன்று உருவானால் அதில் இடம்பெறலாம் என்று உத்தேசிக்கப்படுகிற கட்சிகளும் அவை பெறும் இடங்களும்:
சமாஜ்வாடி- 33, இடதுசாரிகள் - 33, பிஜூ ஜனதா தளம்- 12, ஐக்கிய ஜனதா தளம்- 11, தெலுங்குதேசம்- 9, ராஷ்டிரிய ஜனதா தளம்-12, இந்திய தேசிய லோக்தள்- 2, திமுக-5, அசாம் கன பரிஷத் -2, மதச்சார்பற்ற ஜனதா தளம்- 3 என மொத்தம் 116 தொகுதிகள் வரை கிடைக்கும்.
உத்தேச 4வது அணிக்கு எத்தனை இடங்கள்?
ஐமு கூட்டணி, தேஜ கூட்டணி, 3வது அணியில் இடம்பெறாத 4வது அணி கட்சிகளாக கருதப்படுபவையும் அவை பெறும் இடங்களும்..
அதிமுக 29- திரிணாமுல் -22, பகுஜன் சமாஜ்- 27, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 14, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி-11, தேமுதிக 2, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 3 தொகுதிகளையும் கைப்பற்றுமாம். மொத்தம் 122 தொகுதிகள் வரை உத்தேச 4வது அணிக்கு கிடைக்குமாம்.
பாஜக அணிக்கு 145-160
தி ஹிண்டு- சி.என்.என். தொலைக்காட்சி கருத்துக் கணிப்பிலும் டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பிலும் பார்த்தால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 145 முதல் 160 வரையிலான இடங்கள் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இருப்பினும் தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் மேற்கொள்ளப் போகும் முடிவு காங்கிரஸின் எண்ணிக்கையை சற்றே கூடும் போது இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிகள் வித்தியாசம் குறைவாகத்தான் இருக்கும். இதனால் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரண்டுமே வலுவான அணி சேர்க்கைக்கான 'யுத்தத்தை' நடத்தக் கூடும்.
-
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர்.. 3.5 மணி நேரத்தில் 5.63 லட்சம் பேர்! அடுத்த விஜய் மொமென்ட்? -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications