2ஜி சமோசா, கோல்கேட் சான்ட்விச்னு பெயர் வைத்தால் வன்முறை வெடிக்கும்: காங். எச்சரிக்கை
அகமதாபாத்: குஜராத்தில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த ஊழல்களின் பெயர்களை வைத்தால் வன்முறை வெடிக்கும் என்று அம்மாநில காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களின் பெயரில் உணவுகள் வழங்குவது என்று குஜராத் ராஜ்ய ஹோட்டல் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு தெற்கு குஜராத் ஹோட்டல் அசோசியேஷன் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உணவுப் பொருட்களுக்கு காங்கிரஸ் அரசின் ஊழல்களின் பெயரை வைத்தால் வன்முறை வெடிக்கும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வதோதரா பகுதி காங்கிரஸ் நிர்வாகி ஷைலேஷ் அமின் கூறுகையில்,
குஜராத் உணவகங்களில் உணவுப் பொருட்களுக்கு ஊழல்களின் பெயரை வைத்தால் வன்முறை வெடிக்கும் என்றார்.
காங்கிரஸ் தலைவர் நரேந்திரா ரவாத் கூறுகையில், போராட இது சரியான முறை அன்று. எந்த உணவகமாவது தங்கள் மெனுவில் ஊழல்களின் பெயரை குறிப்பிட்டால் அதற்கு முன்பு போராட்டம் நடத்துவோம். அப்போது போராட்டக்காரர்கள் ஆத்திரம் அடைந்து உணவகத்தை சூறையாடினால் நாங்கள் பொறுப்பில்லை என்றார்.
இந்த எச்சரிக்களை எல்லாம் தாண்டி உணவுப் பொருட்களுக்கு ஊழல்களின் பெயர் வைத்தால் சூடான 2ஜி சமோசா அல்லது கோல்கேட் சான்ட்விச், ஜில்லென்று காமன்வெல்த் மில்க் ஷேக் கிடைக்கலாம்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications