12 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை பிரிந்த இளைஞர் ஃபேஸ்புக் உதவியால் இணைந்தார்

புனோவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் அங்குஷ் டோமலே. அவருக்கு 12 வயதாக இருந்த போது அதாவது 2002 ம் ஆண்டு அவரது தயார் நன்றாக படிக்கவில்லை என்று அடித்து உதைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அங்குஷ் வீட்டை விட்டு 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் உள்ள குருத்துவாராவில் போய் தஞ்சமடைந்தார்.
அங்கு போய் தன்னுடைய பெயரை குர்பான் சிங் என்று மாற்றிக் கொண்டதோடு சீக்கியராக வாழத் தொடங்கிவிட்டார். 10 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
இதனிடையே தனது மகனைக் காணாத அங்குஷ் தாயார் ஹேமலதா அழுது கொண்டே இருந்தார். இதனால் மகனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அங்குஷ்சிற்கு ஒரு சகோதரன் இருக்கிறான் அவரது பெயர் சந்தோஷ். கடந்த இரண்டு வருடங்களாகவே காணாமல் போன தனது சகோதரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனிடைய கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்குஷ் ஃபேஸ்புக் மூலம் தனது சகோதரனை அடையாளம் கண்டு கொண்டார். தன்னுடைய முகத்தில் இருந்த காயத்தை வைத்து தான் யார் என்பதை அடையாளம் கூறினார்.
இதனையடுத்து அவருடைய குரு லூதியானாவில் இருந்து புனே செல்வதற்கு ஏற்பாடு செய்தார். வீட்டிற்கு வந்த அங்குஷ் தனது உறவினர்கள், சொந்தங்களைக் கண்டு ஆனந்த கண்ணீர் விடுத்தார்.
ஆனால் அவர் சீக்கியர் தோற்றத்தில் இருந்த காரணத்தினால் யாரலும் அவரை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து தன்னுடைய காயத்தை காண்பித்தார் சில நிகழ்வுகளை நினைவு படுத்தவே மகனைக் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார் ஹேமலதா.
வீட்டை விட்டு ஓடிப்போன தனக்கு நல்வழி காட்டிய குருவிற்கு நன்றி தெரிவித்த அங்குஷ் தற்போது புனேவிலேயே தங்கிவிட்டார்.
காணாமல் போன மகன் ஃபேஸ்புக் மூலம் தன்னைத் தேடி வந்தது கண்டு மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளார் அந்தத் தாய். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications