தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கும் கோரிக்கை மீண்டும் எழும் அபாயம்?
சென்னை: ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது எழும் வடதமிழ்நாடு, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு பிரிவினை முழக்கம் மீண்டும் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானா உதயமானது போதும்.. நாடு முழுவதும் பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொன்றாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கானா உருவாகவிருப்பதால் தமிழகத்தையும் மூன்றாகப் பிரிக்கும் கோரிக்கை மீண்டும் சூடு பிடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

பாமகவின் பிரிவினை கோரிக்கை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழ்நாடு என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போர்க்குரல் எழுப்பினர்.

சித்தூரையும் சேர்க்கக் கோரிக்கை
அத்துடன் ஆந்திராவின் ராயலசீமா பகுதியான சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களையும் வட தமிழ்நாட்டில் இணைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

சேதுராமனின் தென் தமிழ்நாடு
இதேபோல் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் டாக்டர் சேதுராமன், மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழ்நாடு என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரினார். கேரளாவுடன் இணைக்கப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, மூணாறு ஆகியவற்றை தென் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பது அந்தப் போராட்டக்கார்களின் கோரிக்கை.

மேற்கு தமிழ்நாடு - இது கொமுக கோரிக்கை
கொங்கு நாடு எனப்படும் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு தமிழ்நாட்டை தனி மாநிலமாக்க வேண்டும் என்பதற்காகவே கொங்குநாடு முன்னேற்றக் கழகம் உதயமானது. மிகுந்த எழுச்சியோடு உதயமான இந்த இயக்கம் அரசியல் மற்றும் உட்கட்சி மோதல்களால் தேக்கநிலையில் உள்ளது.

மறுபடியும் சூடு பிடிக்கலாம்
தற்போது ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில் உத்தரபிரதேசம் ,மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகியவை பிரிவினையை எதிர்கொண்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அத்தகைய கோரிக்கைகள் எழக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications