காங்கிரசில் சேருகிறார் விஜயசாந்தி - காங்கிரஸுக்கு தெலுங்கானா மாநிலம் தந்த முதல் வரவு!

தல்லி தெலுங்கானா என்ற கட்சியைத் தொடங்கி பின்னர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் சேர்ந்தவர் விஜயசாந்தி. மேடக் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனித் தெலுங்கானா அமைய வேண்டும் தீவிரமாக போராட்டங்களில் பங்கேற்றவர் விஜயசாந்தி.
இந்த நிலையில், 2014 பாராளுமன்ற தொகுதியில் மேடக் தொகுதியில் சந்திரசேகர் ராவ் போட்டியிட விரும்பியதாக தெரிகிறது. எனவே செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட விஜயசாந்தியிடம் கட்சி தலைமை கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசாந்தி கட்சி நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.
இதற்கிடையே தெலுங்கானா தனி மாநிலத்துக்கு மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டுள்ள நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து வருகிறார்.
மேலும் தெலுங்கானா அறிவிப்பு வெளியிட்ட உடனே, தனது ஹைதராபாத் வீட்டின் முன், சந்திரசேகர் ராவுடன் அவர் இணைந்திருப்பது போன்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோரின் கட்-அவுட்கள் வைக்கப்பட்டன.
இதன் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பது உறுதியாகி உள்ளதாகவும், இந்த இணைப்பு நிகழ்ச்சி 8-ந்தேதி நடைபெறும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய மாநிலம் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கணிப்புகள் தெரிவித்து வருவதால், விஜயசாந்தி இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications