மதுரை அருகே சத்துணவு சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழப்பு
மதுரை: மதுரை அருகே சோழவந்தானில் சத்துணவு சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது திருமால்நத்தம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கயிறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது ஒரே மகன் ஆகாஷ் (2). அங்குள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ஆகாஷ் உள்ளிட்ட 9 சிறுவர்களுக்கு அங்கன்வாடிப் பணியாளர் ஜெயலட்சுமி மதிய உணவைப் பரிமாறியுள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்தில் சிறுவன் ஆகாஷ் வாந்தி எடுத்து மயக்கமடைந்தான்.
இதையடுத்து ஆகாஷை சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்துள்ளனர். பின்பு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தைகள் நலப்பிரிவில் ஆகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனையடுத்து சோழவந்தான் போலீசார் அங்கன்வாடிப் பணியாளர் ஜெயலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கன்வாடியில் மீதமிருந்த உணவின் மாதிரியைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications