கட்சிக்குள் சண்டை... முத்துசெல்விக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். நடந்து முடிந்த கூட்டுறவு தேர்தலில் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் அதிமுகவை சேர்ந்த மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்மன் முருகையா தரப்புக்கும், முத்துசெல்வி எம்எல்ஏ தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
இது தொடர்பாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் பயணியர் விடுதியில் நடந்த கூட்டத்தில் அப்போதைய மாவட்ட செயலாளர் குமார் பாண்டியன் முன்பு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.
கட்சி தலைமையிலிருந்து தனியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து குமார் பாண்டியனும், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளராக இருந்த சேர்மன் முருகையாவின் பதவியும் பறிக்கப்பட்டது.
அன்று முதல் சங்கரன் கோவிலில் இரு கோஷ்டியினருக்கும் அவ்வப்போது மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு திங்களுக்கு முன் குருக்கள்பட்டியில் நடந்த அம்மா திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற சட்ட மன்ற உறுப்பினர் முத்துசெல்வி நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அதிமுகவினர் சிலர் ரகளையில் ஈடுபட்ட னர். இது குறித்து கட்சியின் மேலிடத்துக்கு சட்ட மன்ற உறுப்பினர் முத்துசெல்வி புகார் தெரிவித்ததையடுத்து மேலிட உத்தரவின்படி எம்எல்ஏமுத்துசெல்வி க்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சங்கரன் கோவில்அதிமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலால் சொந்த தொகுதியிலேயே ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications