ஒருவழியா, ரஷ்யால அகதி ஆகிட்டாரு ஸ்னோடென்... சீக்கிரமா ஏர்போர்ட்ல இருந்து வெளியேறுவாராம்

Subscribe to Oneindia Tamil

Edward Snowden got refugee status in Russia
மாஸ்கோ: ரகசியங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் ஸ்னோடென்க்கு ரஷ்யாவில் அகதி அந்தஸ்து கிடைத்துள்ளது. விரைவில் அவர் ஏர்போர்ட்டில் இருந்து வெளியேறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்ற நாடுகளை உலவு பார்த்த ரகசியங்களை சமீபத்தில் வெளியிட்டார் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை ஊழியரான ஸ்னோடென். அவர் கூறிய ரகசியங்களைக் கேட்டு உலகமே அதிர்ச்சியடைந்தது.

நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதற்காக ஸ்னோடென்னை அமெரிக்கா குற்றவாளியாக அறிவித்து, தேடுதல் வேட்டை நடத்தியது. ஒவ்வொரு நாட்டிடமும் தஞ்சம் கேட்டுப்பார்த்தார் ஸ்னோடென். ஆனால், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கை விரித்த நிலையில் ரஷ்யாவிடம் மட்டும் தொடர்ந்து போராடி வந்தார் ஸ்னோடென்.

இதற்காக அவர் ஏர்போர்ட்டிலேயே தங்கி இருந்தார். அவரது தொடர் முயற்சிகளுக்குப் பிறகு தற்போது ஸ்னோடென்னுக்கு ரஷ்யாவில் தஞ்சம் புக அனுமதி கிடைத்துள்ளது. அகதி என்ற அந்தஸ்துடன் இனி அவர் ரஷ்யாவில் வாழலாம். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்னோடென் விரைவில் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+