ஆணான பெண்ணிற்கும், பெண்ணான ஆணிற்கும் பூத்த ‘புனிதக்காதல்’....

அமெரிக்காவில் பாலினத்தை வாலிப வயதில் மாற்றிக் கொள்வோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல் பட்டு வரும் அமைப்பு ஒன்று செயல் பட்டு வருகிறது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு வினோதக் காதல் பூத்தது.
எமரால்டு என்ற பள்ளி மாணாவியும், லூகாஸ் என்ற பல்கலைக் கழக மாணவருக்கும் இடையே உண்டான நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதில் என்ன விசித்திரம் என்கிறீர்களா..?
17 வயதான எமரால்டுக்கு தான் ஒரு பெண்ணாக இருப்பது பிடிக்கவில்லையாம். அதேபோல், 19 வயது லூகாஸுக்கு தான் ஒரு ஆணாக தொடர்வதில் ஆசை இல்லையாம். தங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருந்தனர்.
கடந்தாண்டு ஒருவழியாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டது இந்த ஜோடி. இப்போ லூகாஸ் பெயர் ஹில், எமரால்டு பெயர் ஆரின் ஆண்ட்ரூஸ். தொடர்ந்து காதல் செய்து வரும் இச்ஜோடி தங்களது பழைய ஆடைகளை ஒருவருக் கொருவர் மாற்றி உபயோகப் படுத்திக் கொள்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications