மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… இரு தினங்களில் அணை நிரம்பும்
மேட்டூர்: கர்நாடக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணை இரண்டு நாட்களில் முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம், தற்போது 110 அடியை தாண்டிய நிலையில், பாசனத்திற்கான அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணை முற்றிலும் நிரம்பும் பட்சத்தில் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்படும்.

1 லட்சம் கன அடி
கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தற்போது காவிரியில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ள எச்சரிக்கை
தாழ்வான, மற்றும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து தண்ணீரின் அளவு அதிகமாகி வருகிறது.
அதனால், அடிபெருக்கு தினத்தை கொண்டாட யாரும் ஒகேனக்கல் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அணை 120 அடி
தற்போது கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, 72 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், முழுக் கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை இன்னும் ஒரிரு நாட்களில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 கண் மதகு வழியாக...
அணை நிரம்பும் பட்சத்தில் 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இந்த நீர் கடலில் சென்று கலப்பதை தடுக்கும் வகையில் தண்ணீர் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

2010ல் நிரம்பிய அணை
கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாக இல்லாத காரணத்தால் அணை முழு கொள்ளவை எட்டவில்லை. தற்போது ஆகஸ்ட் முதல்வாரத்திலேயே அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications