ஆப்கனில் இந்திய தூதரகம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்- 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜலதாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் நங்ஹரார் மாகாண தலைநகரமான ஜலதாபாத்தில் இன்று காலை இந்திய தூதரகம் அருகே தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் தூதரகத்துக்கோ தூதரகத்தில் பணியாற்றிய இந்தியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஜலதாபாத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications