கெம்காவுக்கும் நியாயம் கேட்டு கடிதம் எழுத வேண்டியது தானே? சோனியாவுக்கு சமாஜ்வாடி கேள்வி
லக்னோ: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உத்தர பிரதேச மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது சமாஜ்வாடி கட்சியை எரிச்சல் அடையச் செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ப்ரொபேஷனரி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிபவர் துர்கா சக்தி நாக்பால்(28). மணல் கடத்தும் கும்பலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதனால் அவர் ஆளும் சமாஜ்வாடி கட்சியினரின் விரோதத்தை சம்பாதித்தார். இந்நிலையில் ஆக்கிரமிப்பு மதவழிபாட்டு தல கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்தில் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துர்காவுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் சமாஜ்வாடி கட்சி தனது நிலையை மாற்றுவதாக இல்லை.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில்,
சோனியா காந்தி மேலும் 2 கடிதங்களை எழுத வேண்டும். சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் நிலமோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ராப்ர்ட் வாத்ரா தொடர்பான விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்தும் அவர் கடிதம் எழுத வேண்டும் என்று தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications