7ம் ஆண்டு நிறைவுவிழா: 7லட்சம் டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு: ஜெட் ஏர்வேஸ் அதிரடி
Subscribe to Oneindia Tamil

பொதுவாக அக்டோபர் மாதத்தில் விமான நிறுவனங்களின் லாபம் குறைந்து காணம்ப்படும். அதற்குக் காரணம் அம்மாதத்தில் விமானப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவு. அதனை ஈடு கட்டும் விதத்தில் ஒவ்வொரு நிறுவனமும் அதிரடி ஆபர்களை அறிவிப்பது வழக்கம்.
அதன் படி, இன்று தனது 7ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிற ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 7 லட்ச டிக்கெட்டுகளின் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன் படி, 1,777ரூபாயில் ஆரம்பிக்கும் உள்ளூர் கட்டணம் தொடங்கி, நடுத்தர பயண தூரத்திற்கு 2,777ரூ என்றும், அதிக தூரக் கட்டணத்திற்கு 3,777ரூ என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. .












Click it and Unblock the Notifications