உரிமம் இன்றி ஆசிட் விற்றால் 3 மாதம் சிறை, ரூ.50,000 அபராதம்: மத்திய பிரதேச அரசு

பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ஆசிட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
முறையான உரிமம் இன்றி ஆசிட் விற்பவர்கள் அல்லது ஆசிட் விற்பனை குறித்து ஆவணங்களில் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு 3 மாத சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
ஆசிட் வாங்குவோர் கடைகளில் தங்கள் அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் விற்பனையை சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டுகள் கண்காணிப்பார்கள். மேலும் ஆசிட் விற்பனை குறித்து ஆவணங்களில் பதிவு செய்யப்படுகிறதா என்பதையும் அவர்கள் கண்காணிக்கவிருக்கின்றனர்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவோருக்கு சம்பவம் நடந்த 2 வாரத்திற்குள் ரூ.1 லட்சமும், அடுத்த 2 மாதங்களுக்குள் ரூ.2 லட்சமும் ஆக மொத்தம் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்குள் ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், ஆசிட் வீச்சை ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றமாக மாற்றவும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications