தற்கொலைக்கு முன்பு என்னிடம் போனில் பேசினார் இளவரசன்- திவ்யா திடீர் தகவல்

இளவரசன் மரணம் தற்கொலைதான் என்பதை போலீஸார் திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும் அதுதொடர்பான ஆதாரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். எஸ்.பி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் இதுதொடர்பான ஆவணங்களைத் திரட்டியுள்ளனர்.
தற்போது திவ்யா சில புதிய தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதாவது இளவரசன் தன்னிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். மேலும், ஒரு தடவை அவர் சென்னை லாட்ஜில் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதை அவரது தாயார் தேன்மொழியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து திவ்யா போலீஸாரிடம் கூறுகையில், இளவரசன் தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நீ என்னோடு வாழ வராவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.
மேலும், உயர்நீதிமன்ற விசாரணையின்போது சென்னையில் லாட்ஜில் தங்கியிருந்த போது தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறினார் என்றார்.
மேலும் திவ்யா, இளவரசன் செல்போன் பேச்சுக்களை போலீஸார் செல்போன் நிறுவனத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர். அதை திவ்யாவடிம் போட்டுக் காட்டி இதில் பேசியிருப்பது நீங்களும், இளவரசனுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு, இது நாங்கள் பேசியதுதான் என்று கூறியுள்ளார் திவ்யா.
இளவரசன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்ததையும் போலீசார் கைப்பற்றி வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே இளவரசன் எழுதிய காதல் கடிதங்களை வைத்து இந்த கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்துதானா? என்று திவ்யாவிடம் கேட்டனர். அதை பார்த்த திவ்யா, இது இளவரசனின் கையெழுத்துதான் என்று உறுதிப்படுத்தினார்.
திவ்யாவின் தாய் தேன்மொழியும், இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னிடம் போனில் தொடர்பு கெண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications